About us

திமுக தகவல் தொழில் நுட்ப அணி

மாறும் காலத்திற்கேற்பவும், சமூக மாற்றத்திற்கேற்பவும் மெருகேற்றிக்கொள்ளும் மக்கள் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அத்தியாயத்தில் ஒரு மைல்கல்லாய் உருவாக்கப்பட்டது தகவல் தொழில்நுட்ப அணி.

இதன் மாநில செயலாளராக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் .பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ அவர்கள் கழகத்தலைவர் தளபதி திரு.மு.க ஸ்டாலின் அவர்களால் 12.06.2017 அன்று நியமிக்கப்பட்டார்கள்.

தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து இந்த அணி மற்ற அணிகளில் இருந்து வேறுபட்டு தனித்துவம் பெற்றிடவும், கழகப்பணிகளை செவ்வனே செய்திடவும் ஏதுவாக அணிக்காக பணிகள் , நோக்கம், கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கிடும் யோசனைகளை கழகத்தலைவர் தளபதி அவர்கள் எடுத்துக்கூறி அதற்கான ஒப்புதல் பெற்று பணிகளை தொடங்கினார் நமது செயலாளர் அவர்கள்.

63

கழக மாவட்டங்கள்

17652

நிர்வாகிகள்

செயலாளர் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அவருக்கு உறுதுணையாக அணியின் மாநில துணை செயலாளர்களாக திரு. எம்.கே.கார்த்திக் மோகன், திரு. எஸ்.டி.இசை மற்றும் திருமதி. தமிழ் பொன்னி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து தொழில் நுட்ப அணிக்கு மாவட்ட வாரியாகவும் , தொகுதி வாரியாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் தொடர்பான திறந்தவெளி அறிவிப்பு கழக நாளிதழான முரசொலியில் 26.9.2017 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

மாவட்ட வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்முகத்தேர்வுகள் நடத்திட 3.11.2017 அன்று தொடங்கிய பயணம் 65 கழக மாவட்டங்கள், 26 நாட்கள், 5257 கி.மீ தூரம் பயணித்து, மொத்தம் பெறப்பட்ட 1740 விண்ணப்பதாரர்களில் இருந்து மட்டும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் என 410 நிர்வாகிகள் தகுதி மற்றும் திறமைகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்பெற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களின் ஒப்புதலோடு 13.03.2018 அன்று முரசொலியில் வெளியிடப்பட்டதோடு நில்லாமல் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் விழா சென்னை ஹில்டன் ஹோட்டலில் 07.04.2018 அன்று சிறப்பாக நடந்தேறியது.

இதனிடையே மண்டல வாரியாக நிர்வாகத்தை வலிமைப்படுத்தும் பொருட்டு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட மாநில துணை செயலாளர்களுக்கு உறுதுணையாக திரு. நவீன் , திரு. எம்.எம்.அப்துல்லா, திரு. சி.எச்.சேகர், திரு.சி.இலக்குவன், திரு. சுப்பிரமணியன், திரு.அழகிரி சதாசிவம், திரு.ஏ.கே தருண் விஸ்வநாதன் ஆகியோர் மாநில துணை செயலாளர்களாகவும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாகவும் மாநில செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

மாநில செயலாளர், மாநில துணை செயலாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பணியாற்றி வரும் மாவட்ட மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் படிநிலை பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு 19.9.2018 அன்று முதல் மாவட்டத்தின் அறிவிப்பு அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களின் அறிவிப்பும் முரசொலியில் வெளியிடப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.

இன்றைய நிலையில் ஏறக்குறைய 40 மாவட்டங்களில் முழுமையான நிர்வாக கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து சுமார் 11,000 நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

தகவல் தொழில்நுட்ப அணியின் பணி என்பது சமூக வலைதள பங்களிப்பு மட்டுமே என்கிற சமூகத்தின் கருத்தினை மாற்றி களப்பணியிலும் ஈடுபடுத்தி அவரவர் மாவட்டங்களில் உள்ள சாமானிய மக்களின் தேவைகளையும் , கருத்துக்களையும் தலைமையிடம் உடனுக்குடன் தெரிவிக்கவும், தலைமைக்கும் கடை நிலை நிர்வாகிகளுக்கும் இடையேயான நேரடித்தொடர்பை உருவாக்கிடவும், கழக பணிகளையும், எதிர்கட்சிகளின் குறைகளையும் மக்களிடம் நேரடியாக சென்று சுட்டிக்காட்டி கழகத்தை வலுப்படுத்தி நிலையான மக்களாட்சி தமிழகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்கிற கலைஞரின் தொலைநோக்கு லட்சிய வார்த்தைகளுக்கு வலு சேர்த்திட கழகத்தலைவர் தளபதி.மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பயணித்து வருகிறது திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி.