DMK IT WING

வீரன் சாவதே இல்லை… கோழை வாழ்வதே இல்லை

“ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது.

சோதனையில்தான் நமது நெஞ்சின் வலிமை நமக்குப் புரிகிறது.”

திமுக தகவல் தொழில் நுட்ப அணி

சமூக நீதி-சுயமரியாதை-பகுத்தறிவு வழியில் சமத்துவத்தை அடைவதை இலக்காகக் கொண்ட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் காலத்திற்கேற்ற வகையில் ஊடகங்களை வெற்றிகரமாகக் கையாண்டு, மக்களிடம் தனது கொள்கைகளைக் கொண்டு சேர்த்து வருகிறது.

பொதுக்கூட்டம், பத்திரிகை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளம் என அனைத்து வகை ஊடகங்களிலும் முத்திரை பதித்த தலைவர்களையும் மூத்த நிர்வாகிகளையும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் மற்றுமொரு புதிய மைல்கல்லாய் உருவாக்கப்பட்டது தகவல் தொழில் நுட்ப அணி.

இணையதளத்திலும் நேரடிக் களத்திலும் முனைப்புடன் செயல்பட்டு கழகக் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வாய்ந்த அணியாக செயல்பட்டு வருகிறது. எளிய மக்களின் தேவைகளையும் , கருத்துக்களையும் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியையும் சுமந்து பயணிக்கிறது.

தலைமை முதல் கிளைக் கழகம் வரை விரிந்து பரந்த பேரியக்கத்தின் அனைத்து உடன்பிறப்புகளுக்குமான இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகிறது தகவல் தொழில்நுட்ப அணி. கழக பணிகளையும், கழக அரசின் சாதனைகளையும் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு சேர்க்கும் பொறுப்புடன், எதிர்கட்சியினர் பரப்பும் வதந்திகள்-அவதூறுகளைத் தகர்க்கும் பதிலடிகளையும் உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய ஜனநாயக அரசியல் இயக்கத்தை-பேரியக்கமாக வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் வழியில்-இந்தியாவின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாக்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-கழகத் தலைவர் தளபதி.மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியினைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறது திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணி.

72

கழக மாவட்டங்கள்

23329

நிர்வாகிகள்